ரூ.215 கோடி மதிப்பீட்டில் மதுரையில் மிக பிரம்மாண்டமாக அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு நூலகம், இரவில் வண்ண வண்ண லேசர் ஒளி விளக் குகளால் கலங்கரை விளக்கம் போல ஜொலித்து வருகிறது.
மதுரை புது நத்தம் சாலையில் 2.70 ஏக்கரில் 3.3 லட்சம் புத்தகங்களுடன் மிக பிரம்மாண் டமாக ரூ.215 கோடியில் கலைஞர் நூலகம் உருவாக்கப் பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டுள் ளது. மாணவர்கள், போட்டித் தேர்வர்கள், ஆராய்ச்சியாளர்கள், குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமான இந்த நூலகம் அதிநவீன தொழில்நுட்ப வசதியுடன் அமைக்கப்பட்டுள்ளது.
நூலகம் என்பதை தாண்டி, அதன் நவீனமும், கட்டிட அமைப்பும் பொது மக்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. இதனால் தினமும் ஆயிரக்கணக்கானோர் குடும்பத் தோடு வந்து நூலகத்தை பார்வை யிட்டு செல்கிறார்கள். நூலகம் முன் சுய புகைப்படம் எடுப்பது, ஒவ்வொரு தளத்துக்கும் சென்று புத்தகங்களை பார்வையிடுவது, நூலகத்தின் நவீன உள்கட்டமைப்பை பார்த்து வியப் படைந்து செல்கின்றனர்.
மெய் நிகர் தொழில் நுட்ப வசதியுடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியுடன் உரையாடுவது, தொடுதிரை வசதியுடன் புத்தகங்களை தேர்வு செய்து படிப்பது, குழந்தைகள் விளை யாட்டுடன் புத்தக வாசிப்பு என நூலகம் அனைவரையும் கவர்ந் துள்ளது. அதனால், தற்போது கலைஞர் நூற்றாண்டு நூலகம், மதுரையின் அடையாளமாகவும், சுற்றலாத்தலமாகவும் மாறிவிட்டது.
நூலகத்தின் முகப்பு மேற் கூரையில் நான்கு திசைகளிலும் இரவில் மின்னொளியில் ஒளிரும் வகையில் வண்ண வண்ண லேசர் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளன. இவை நாலாபுறமும் சுழன்று ஜொலிப்பதால் கலங்கரை விளக்கம் போல காட்சி தருகிறது. நூலகத்துக்கு வரும் பொது மக்களை ஒழுங்குபடுத்த தற்காலி கமாக, மாவட்ட நூலகங்களில் பணிபுரியும் நூலகர்களை கலை ஞர் நூலகத்தில் மாற்று பணியில் அமர்த்தி உள்ளனர்.