கொளத்தூர் தொகுதி முடிவைப் பார்த்தும் திமுக பாடம் கற்றுக்கொள்ளவில்லை: உதயநிதிக்கு முதல்வர் விஜய் பதில்

 ‘நம் வெற்​றி​யின் வீச்சு எப்​படி இருந்​தது என்​ப​தைக் கொளத்தூர் உள்​ளிட்ட தொகு​தி​களில் பார்த்​தும் கூடவா புரிய​வில்​லை அதி​காரத்துடன் ஆட்​டம் போட்ட 15 அமைச்​சர்​களின் தோல்​வியைப் பார்த்த பிறகும் திமுக பாடம் கற்​றுக்​கொள்​ள​வில்​லை’ என உதயநி​திக்கு தமிழக முதல்​வர் விஜய் பதிலடி கொடுத்​துள்​ளார்.

சட்​டப்​பேர​வை​யில் நேற்று பேசிய எதிர்க்​கட்​சித் தலை​வர் உதயநி​தி, தவெக​வுக்கு எதி​ராக 65 சதவீதம் பேர் வாக்​களித்​துள்​ளனர் என்று கூறி​னார். இதற்கு பதிலளிக்​கும் வகை​யில் முதல்​வர் விஜய் வெளி​யிட்​டுள்ள அறிக்​கை: சட்​டப்பேரவையில் நடை​பெற்ற நம்​பிக்கை கோரும் தீர்​மானத்​தில், மக்​கள் அரசு 144 உறுப்​பினர்​களின் ஆதர​வுடன் வெற்றி பெற்​றுள்​ளது.

திமுக போன்ற கட்​சிகள் தவெக-​வின் பெரும்​பான்மை குறித்​துப் பேசி வரு​கின்​றன. ஆனால், யதார்த்​தம் என்​னவென்​றால், கூட்​டணி இல்​லாமல் தனித்​துப் போட்​டி​யிட்ட தவெக 34.92% வாக்​கு​களைப் பெற்​றுள்​ளது. தனிப்​பட்ட முறை​யில் திமுக பெற்ற வாக்​கு​கள் வெறும் 24.19% மட்​டுமே.

திமுகவை விட தவெக 52,97,065 வாக்​கு​கள் அதி​கம் பெற்​றுள்​ளது என்​ப​தைத் தேர்​தல் ஆணை​யப் புள்​ளி​விவரங்​கள் உறு​திப்​படுத்​துகின்​றன. தவெக-வை 3.21 கோடி மக்​கள் நிராகரித்​து​விட்​ட​தாகக் கூறும் திமுக, அதே கணக்​குப்​படி 3.68 கோடி மக்​களால் நிராகரிக்​கப்​பட்ட கட்​சி​தான்.

தமிழகத்​தின் 76% மக்​களால் நிராகரிக்​கப்​பட்ட ஒரு கட்​சி, 35% மக்​களின் ஆதர​வுடன் வெற்றி பெற்ற எங்​களைப் பார்த்து ஏளன​மாகப் பேசுவது நகைப்​புக்​குரியது. மதச்​சார்​பற்ற நிலைப்​பாட்​டில் நாம் உறு​தி​யாக இருப்​ப​தால்​தான் காங்​கிரஸ், விசிக, இடது​சா​ரி​கள் மற்​றும் முஸ்​லிம் லீக் கட்​சிகள் நம்மை ஆதரித்​தன.

சட்​டப்​பேரவை நிகழ்​வு​களை இருட்​டடிப்பு செய்​யாமல் நேரடி ஒளிபரப்பு செய்​ததன் மூலம் எதை​யும் மறைக்​காத அரசு என்​பதை நிரூபித்​துள்​ளோம்.

சமீபத்திய செய்திகள்