சட்டவிரோத பணப்பரிமாற்ற புகார்: சென்னையில் 2 இடங்களில் அமலாக்கத்துறை சோதனை

தேனாம்​பேட்​டை, எல்​லை​யம்​மன் கோயில் தெரு​வைச் சேர்ந்​தவர் தரணிதரன். இவர் போக்​கு​வரத்​துத் துறை​யில் துணை ஆணை​ய​ராகப் பணி​யாற்றி ஓய்வு பெற்​றவர். இவர் தனது பணிக்​காலத்​தில் வரு​மானத்​துக்கு அதி​க​மாகச் சொத்து சேர்த்​த​தாகக் கூறப்​படு​கிறது.

இது தொடர்​பாக ஏற்​கெனவே விசா​ரணை நடை​பெற்று வந்த நிலை​யில், சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடுப்​புச் சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை​யும் வழக்​குப்​ப​திவு செய்து விசா​ரணை​யைத் தொடங்​கியது.

இதன் தொடர்ச்​சி​யாக, நேற்று காலை முதல் தரணிதரன் வீட்​டில் அமலாக்கத்துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர். இதே​போல், சென்னை திரு​வொற்​றியூரைச் சேர்ந்த தொழில​திபர் முரு​கேசன் என்​பவரது வீட்​டிலும் அமலாக்​கத் ​துறையினர் சோதனை நடத்தினர்.

டிரான்​ஸ்​போர்ட் தொழில் செய்​து​வரும் இவருக்​கும், இந்த சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற வழக்​குக்​கும் தொடர்பு இருக்​கலாம் என்ற சந்​தேகத்​தின் அடிப்​படை​யில் இந்​தச் சோதனை மேற்​கொள்​ளப்​பட்​டது.

ஐதரா​பாத்​தைச் சேர்ந்த அமலாக்​கத் துறை அதி​காரி​கள் இந்​தச் சோதனை​யில் நேரடி​யாகப் பங்​கேற்​ற​தாக​வும், இதில் முக்​கிய ஆவணங்​கள் கைப்​பற்​றப்​பட்​ட​தாக​வும் கூறப்​படு​கிறது.

தற்​போது அந்த ஆவணங்​களை ஆய்வு செய்​யும் பணி நடைபெறுகிறது. ஆய்வு முடிந்த பிறகு கைப்​பற்​றப்​பட்ட ஆவணங்​கள் குறித்த விவரங்​கள் வெளி​யிடப்​படும் என அதி​காரி​கள்​ தெரி​வித்​துள்​ளனர்​.