டிஎன்பிஎஸ்சி நடவடிக்கையை ரத்து செய்ய முடியாது

போலி தமிழ்வழி கல்விச் சான்றிதழ் அளித்து குரூப் 1 பணியில் சேர்ந்தோர் மீதான நடவடிக்கையை ரத்து செய்ய உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது.

மதுரையைச் சேர்ந்த கலைவாணி, திருநங்கை சொப்னா, சதீஷ்குமார், சங்கீதா உள்ளிட் டோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு:

தமிழகத்தில் டிஎன்பிஎஸ்சி கடந்த 2020-ல் நடத்திய குரூப் 1 தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான சலுகை அடிப்படையில் துணை ஆட்சி யர், வணிகவரித் துறை உதவி ஆணையர், டிஎஸ்பியாக பணி நியமனம் செய்யப்பட்டோம்.

டிஎன்பிஎஸ்பி குரூப் தேர்வில் தமிழ்வழியில் கல்வி பயின்ற தாக போலிச் சான்றிதழ் தாக்கல் செய்து சலுகை பெற்றதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணைக்கு ஈரணைக்கு உத்த உத்தரவிட்டது. விசாரணையில் நாங்கள் போலி தமிழ் வழிக் கல்விச் சான்றிதழ் அளித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. இதையடுத்த எங்கள் பணித் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி உத்தரவிட்டது. நாங்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டோம்.

குரூப் 1 பணிக்குத் தேர்வா னதை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவையும், எங்களின் தமிழ்வழிக் கல்விச் சான்றிதழ் உண்மையானது.அல்ல என்று காமராசர் பல்கலைக்கழகம் அளித்த அறிக்கையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். இவ்வாறு கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் ஏற்கெனவே விசாரணைக்கு வந்தபோது பணித் தேர்வை ரத்து செய்து டிஎன்பிஎஸ்சி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இந்நிலையில் மனுக்களை விசாரித்த நீதிபதி பி.புகழேந்தி பிறப்பித்த உத்தரவு:

மனுதாரர்கள் டிஎன்பிஎஸ்சி தேர்வில் தமிழ் வழியில் கல்வி பயின்றோருக்கான 20 சதவீத முன்னுரிமை அடிப்படையில் தேர்வாகியுள்ளனர். இவர்கள் பணியில் சேர்ந்த பிறகு 20 சதவீத சலுகை பெற வழங்கிய தமிழ்வழி கல்விச்சான்றிதழ் உண்மைத் தன்மை குறித்து மதுரை காமராசர் பல்கலைக்கழத்துக்கு லஞ்ச ஒழிப்புத்துறை கடிதம் அனுப்பியது.

அதற்கு பல்கலைக்கழகம் அளித்த பதிலில், மனுதாரர்கள் தாக்கல் செய்த சான்றிதழ் போலியானது எனக் கூறப்பட்டுள்ளது. இதையடுத்தே மனுதாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மனுதார்கள் தொலைதூரக் கல்வி வழியாக வெவ்வெறு மையங்கள் வழியாக பட் டம் பெற்றுள்ளனர். மனுதாரர்கள் பட்டப்படிப்புக்கு விண்ணப்பித்த மையம் மற்றும் சேர்க்கை மையங்கள் தொடர்பான முரண்பாடுகள் உள்ளன. மனுதாரர்கள் இறுதி ஆண்டுப் படிப்பில் அனைத்துப் பாடங்களிலும் ஒரே பருவத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். இது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

அரசுப் பணியில் கடமையை நிறைவேற்ற நேர்மை, வெளிப்படைத் தன்மை, ஒழுக்கம் அவசியம். அரசுப் பணி நியமனங்கள் சட்டத்துக்கு உட்பட்டே வழங்கப்படுகின்றன. மோசடி அல்லது சூழ்ச்சி மூலம் அரசுப் பணி வழங்குவது அல்ல. எனவே. அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மனுதாரர் களுக்கு எதிரான டிஎன்பிஎஸ்சி நடவடிக்கைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை விலக்கப்படுகிறது. இவ்வாறு நீதிபதி உத்தரவில் கூறியுள்ளார்.

சமீபத்திய செய்திகள்