புலிகளின் இடத்தைப் பேணிக்காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
ஜூலை 29-ம் தேதி – உலக புலிகள் தினத்தையொட்டி, முதல்வர் மு.க.ஸ்டாலின், சமூக வலைதளப் பதிவில், “உலகப் புலிகள் நாளில், சிறப்புமிகு உயிரினமான நம் புலிகளின் பாதுகாப்புக்காகக் குரல் கொடுப்போம். அருகிவரும் உயிரினமான புலிகளைக் காப்பதற்கான தமிழக அரசின் முயற்சிகள் சிறந்த முடிவுகளை அளித்துள்ளது. 2018-ம் ஆண்டில் 264 ஆக இருந்த புலிகளின் எண்ணிக்கை 2022-ல் 306 ஆக உயர்ந்துள்ளது. கானகத்தில் புலிகளின் இடத்தைப் பேணிக்காத்து, அவற்றின் அழகைப் போற்றுவோம்” என்று தெரிவித்துள்ளார்.