தமிழக முதலமைச்சரும் தமிழக வெற்றிக் கழக தலைவருமான விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையேயான விவாகரத்து வழக்கு, செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்தில் இன்று (ஜூன் 15) விசாரணைக்கு வருகிறது.
சங்கீதா, கடந்த 2025 டிசம்பர் 24-ம் தேதி செங்கல்பட்டு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமக்கு விவாகரத்து வழங்கவும், நிரந்தர ஜீவனாம்சம் வழங்கவும் கோரியிருந்தார்.
இந்த மனு கடந்த பிப்ரவரி 26-ம் தேதி விசாரணைக்கு வந்தபோது, வழக்கை செங்கல்பட்டு முதலாவது குடும்ப நல நீதிமன்றத்துக்கு மாற்றி நீதிமன்றம் உத்தர விட்டது.
தொடர்ந்து, கடந்த ஏப்ரல் 20-ம் தேதி விசாரணைக்கு வந்த இந்த வழக்கு மேலும் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வர உள்ளது.
இந்த விசாரணையில் விஜய் காணொலி காட்சி (ஆன்லைன்) வாயிலாக ஆஜராக நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கின் அடுத்தகட்டம் குறித்து அரசியல் மற்றும் பொதுமக்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவுகிறது.



