பிரான்ஸ் மக்கள், ஏர் கண்டிஷனர் வாங்க கடைகளில் முட்டி மோதும் காட்சிகள் வெளியாகிவருகின்றன.
ஏர் கண்டிஷனர் வாங்க முட்டி மோதும் கூட்டம்
ஐரோப்பா முழுவதும் வெப்பம் வாட்டி வதைக்கும் நிலையில், பிரான்ஸ் மக்கள், ஏர் கண்டிஷனர் மற்றும் மின்விசிறிகள் வாங்க கடைகளில் குவிந்துள்ளார்கள்.
தலைநகர் பாரீஸ் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் அமைந்துள்ள பல்பொருள் அங்காடிகள் பல தள்ளுபடி அறிவித்துள்ள நிலையில், மக்கள் கடைகளில் குவிந்துள்ள காட்சிகளை வெளியாகியுள்ள வீடியோவில் காணலாம்.

அடுத்த வெப்ப அலைக்கு முன் எப்படியாவது ஏர் கண்டிஷனர் வாங்கிடவேண்டும் என முடிவு செய்துள்ள மக்கள் பல்பொருள் அங்காடிகள் முன் நீண்ட வரிசையில் நிற்பதையும் காணலாம்.
அத்துடன், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஏர் கண்டிஷனர்கள் மற்றும் மின்விசிறிகள் மட்டுமே தள்ளுபடி விலைக்குக் கிடைக்கும் என்பதால், கடை திறந்ததும் மக்கள் வேக வேகமாக ஓடும் காட்சிகளையும் காணமுடிகிறது.
மேலும், சில கடைகளில் கூட்டத்தைக் கட்டுப்படுத்த பொலிசாரை அழைக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.





