பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம்

பிரான்சில் வாழ்ந்துவந்த பிரித்தானியப் பெண்ணொருவர் மர்மமான முறையில் உயிரற்ற நிலையில் கண்டெடுக்கப்பட்ட வழக்கில் பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

பிரித்தானிய பெண்ணுக்கு நேர்ந்த பயங்கர முடிவு

2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 29ஆம் திகதி, பிரான்சிலுள்ள Tremolat என்னும் கிராமத்தில் வாழ்ந்துவந்த கேரன் கார்ட்டர் (Karen Carter, 65) என்னும் பிரித்தானியப் பெண், தனது காரின் அருகே படுகாயமடைந்து இரத்த வெள்ளத்தில் கிடந்தார்.

 

அவர், மார்பு, கைகள், கால்கள் மற்றும் இடுப்பில் கூர்மையான ஒரு ஆயுதத்தால் கடுமையாக தாக்கப்பட்டிருந்தார். அவசர உதவிக்குழுவினர் அவரைக் காப்பாற்ற முயன்றும் அவரைக் காப்பாற்ற இயலவில்லை.

ஒரு வேடிக்கையான முக்கோணக் காதல்

இதற்கிடையில், கேரனுடைய கொலைக்குக் காரணம், அவர் முக்கோணக் காதல் ஒன்றில் ஈடுபட்டிருந்ததே என கூறப்பட்டது.

கேரன், திருமணமானவர். அவரது கணவர் தென்னாப்பிரிக்காவில் வாழ்ந்துவருகிறார்.

இந்நிலையில், கேரன் பிரான்சில் வாழும் ஜீன் (Jean-François Guerrier, 75) என்பவருடன் காதலில் விழுந்துள்ளார்.

பிரான்சில் கொல்லப்பட்ட பிரித்தானிய பெண் வழக்கு: முக்கிய திருப்பம் | Female Friend Charged Kills Of Brit Girl In France

விடயம் என்னவென்றால், ஏற்கனவே மேரீ (Marie-Laure Autefort, 70) என்னும் பெண் ஜீனை கண்மூடித்தனமாக காதலித்துவந்துள்ளார். ஜீனோ அவரை விட கேரன் மீதுதான் அதிகம் ஆர்வம் காட்டியுள்ளார்.ஆக, பொறாமையால் மேரீ கேரனைக் கொலை செய்துவிட்டாரா என்பதை அறிவதற்காக அவரை காவலில் எடுத்து 40 மணி நேரம் விசாரணைக்குட்படுத்தினார்கள் பொலிசார்.

அதே நேரத்தில், மற்றொரு 70 வயது பெண்ணும் விசாரணைக்குட்படுத்தப்பட்டார். அவரும் கேரன் வீட்டின் அருகில் வாழும் அவரது தோழிகளில் ஒருவர். ஆனால், அவரை பொலிசார் அப்போது விடுவித்துவிட்டார்கள்.

வழக்கில் முக்கிய திருப்பம்

இந்நிலையில், 2025ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 30ஆம் திகதி விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட அதே 70 வயது பெண்ணை, தற்போது மீண்டும் பொலிசார் கைது செய்துள்ளார்கள்.

கேரனை திட்டமிட்டு கொலை செய்ததாக சந்தேகத்தின் பேரில் அந்தப் பெண் கைது செய்யப்பட்டுள்ளார். அவரது பெயர் வெளியிடப்படவில்லை.

வேடிக்கை என்னவென்றால், கேரன் காதலித்த ஜீனை, இந்தப் பெண்ணும் காதலித்ததாக கருதப்படுகிறது!