சுவிட்சர்லாந்தில், ராணுவ முகாம் ஒன்றை ட்ரோன்கள் சூழ்ந்த விடயம் பரபரப்பை உருவாக்கியுள்ளது.
ராணுவ முகாமை சூழ்ந்த ட்ரோன்கள்
சுவிட்சர்லாந்திலுள்ள ராணுவ முகாம் ஒன்றின் மேல் பல ட்ரோன்கள் அணிவகுத்ததாக சுவிஸ் ராணுவத் தளபதியான பெனடிக்ட் ரூஸ் தெரிவித்துள்ளார்.
பாதுகாப்பு கருதி, அது எந்த இடம் என்பது குறித்த விவரங்கள் வெளியிடப்படாத நிலையில், ஒரு ட்ரோன் அல்ல, பல ட்ரோன்கள் முறைப்படி அணிவகுத்துச் சென்றதாகவும், ஆகவே, அது யாரோ இளைஞர்கள் குறும்புக்காக செய்த செயல் அல்ல, ட்ரோன்கள் விடயத்தில் கைதேர்ந்தவர்கள் அதன் பின்னணியில் உள்ளார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சமீப காலமாக, பல ஐரோப்பிய நாடுகளில், விமான நிலையம் போன்ற முக்கியமான இடங்களில் இதுபோல் ட்ரோன்கள் தென்படும் விடயம் பெரும் தொல்லையாக உருவெடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.





