பட்டினிக்கெதிரான பிரெஞ்சு அமைப்பின் மனிதநேய பணியாளர்கள் 17 பேர் மூதுரில் படுகொலை செய்யப்பட்டதன் 20 ஆம் ஆண்டு நினைவு வணக்க நிகழ்வு, குறித்த பணியாளர்கள் நினைவாக பிரான்சின் புறநகர் பகுதி கிளிச்சி நகரில் நிறுவப்பட்டுள்ள நினைவுக்கல்லின் முன்பாக கடந்த 04.08.2026 செவ்வாய்க்கிழமை காலை 11.00 மணிக்கு நினைவுச்சுடர் ஏற்றி வணக்கம் செலுத்தப்பட்டது.
தமிழர ஒருங்கிணைப்புக் குழு பிரான்சு, கிளிச்சி பிராங்கோ தமிழ்ச் சங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் குறித்த மனிதநேய அமைப்பின் உறுப்பினர்கள், மாநகரசபை உறுப்பினர்கள், முக்கியஸ்தர்கள் உயிர் இழந்தவர்களின் உறவுகள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டு கருத்துக்களையும் தெரிவித்திருந்தனர்;.
⁃ பொதுச்சுடரினை திரு பரராஐசிங்கம் யசோக்குமார் உப பொறுப்பாளர் தமிழ்ச்சங்கம் கிளிச்சி அவர்கள் ஏற்றி வைக்க
⁃ ஈகைச்சுடரினை படுகொலை செய்யப்பட்ட மனித நேயப் பணியாளர்களில் ஒருவரான செல்வி கோவர்த்தினி கனகரட்ணம் அவர்களின் சகோதரர். திரு அமுதன் சிங்கநாயகம் அவர்கள் ஏற்றி வைத்தார்.
⁃ மலர்வணக்கத்தினை படுகொலை செய்யப்பட்ட மனித நேயப் பணியாளர்களில் ஒருவரான செல்வி கோவர்த்தினி கனகரட்ணம் அவர்களின் மருமகன் செல்வன் பிரமோத் சிங்கநாயகம் அவர்கள் செலுத்தியிருந்தார்.
⁃ கிளிச்சி நகரசபையின் மலர் வணக்கத்தினை Mme Michelle CAPDET அவர்களும் ⁃ ACF(Action Contre Faim)அமைப்பிற்கான மலர் வணக்கத்தினை அதன் பிரதிநிதி. M. Loïc Blanchard directeur du juridique et de la conformité de Action Contre la Faim (ACF) அவர்களும் செலுத்தியிருந்தார்கள்.
தொடர்ந்து கிளிச்சி தமிழ்ச்சங்க நிர்வாக உறுப்பினர்களால், மனித நேயப் பணியாளர்களுக்கான சுடரேற்றப்பட்டது. அகவணக்கத்தினைத் தொடர்ந்து நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்ட பொது மக்களால் மலர்வணக்கம் செலுத்தப்பட்டது.
தொடர் நிகழ்வாக கிளிச்சி தமிழ்ச்சோலை மாணவிகள் செல்விகள் அஸ்விதா பவளசிங்கம், ரபிசா ரவீந்திரன் ஆகியோரால் முறையே தமிழ்,பிரெஞ்சு மொழிகளில் நினைவேந்தல் நிகழ்வு தொகுத்து வழங்கப்பட்டது.
பிரெஞ்சு மொழியிலான மனிதநேயப்பணியாளர்ககளின் நினைவு உரைகளை தமிழ்ச்சோலை பள்ளி மாணவிகள் நிவேதா இந்திரகுமார். அவொந்திகா அனெஸ்ரி,தியோணிகா பாலச்சந்நிரன்,தானியா கதிரவேல் ஆகியேர் வழங்கியிருந்தார்கள்.
தொடர்நிகழ்வாக
படுகொலை செய்யப்பட்ட பணியாளர் அமரர் கோவர்த்தினி கனகரட்ணம் அவர்களின் சகோதரர். திரு அமுதன் சிங்கநாயகம் அவர்கள் தனது உணர்வுகளின் வெளிப்பாட்டை வந்திருந்த ACF பிரதிநிதிகளுக்கும்,மக்களுக்கும் தமிழில் தெளிவு படுத்த அதனை பிரெஞ்சு மொழியில் தமிழ்ச்சோலை பள்ளி மாணவி தியோணிகா பாலச்சந்திரன் மொழிபெயர்த்திருந்தார்.
சிறப்புரைகளை கிளிச்சி மாநகரசபை பிரதிநிதி Mme Michelle CAFDET. M. Manuel ALLAMELU ஆகியோரும். ACF பிரதிநிதி. M. Loïc Blanchard directeur du juridique et de la conformité de Action Contre la Faim (ACF) அவர்களும் வழங்கினார்கள் இறுதியாக தொகுப்புரையினையும், நன்றியுரையினையும் கிளிச்சி தமிழ்ச்சங்க பொறுப்பாளர் திரு சச்சி கந்தையா அவர்களும் ஆற்றியிருந்தார்கள் மூதூர் படுகொலை தொடர்பான நீதி வேண்டிய பத்து பக்க அறிக்கையொன்று கிளிச்சி தமிழ்ச்சங்க பொறுப்பாளராலும்,படுகொலை செய்யப்பட்ட பணியாளரின் சகோதரராலும் கையொப்பமிடப்பட்டு ACF இன் சட்ட இயக்குனர்(Directeur Juridique)அவர்களிடம் கையளிக்கப்பட்டதுடன்






