நல்லூரில் தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினொராவது நாள் நிகழ்வுகள்

தியாகதீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தலின் பதினொராவது நாள் நிகழ்வுகள் இன்று வியாழக்கிழமை (25.09.2025) காலை-09 மணியளவில் யாழ் நல்லூரில் உள்ள தியாகதீபம் திலீபனின் நினைவுத் தூபியடியில் தியாகதீபம் திலீபன் நினைவேந்தல் ஏற்பாட்டுக் குழுவின் ஏற்பாட்டில் அனுஷ்டிக்கப்பட்டது.
முன்னாள் போராளி கஜேந்திரன் பொதுச் சுடரேற்றி அஞ்சலித்தார். ஒரு நிமிட அக வணக்கத்தத்தைத் தொடர்ந்து திலீபனின் உருவப் படத்துக்கு மலர்மாலைகள் அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. தொடர்ந்து திலீபன் உண்ணாவிரதமிருந்து உயிர் துறந்த நல்லூர்க் கந்தசுவாமி ஆலய வடக்கு வீதியிலும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.