தமிழரசு கட்சியினர் ஒற்றையாட்சிக்குள் தீர்வுகாண சம்மதம் தெரிவித்துள்ளனர்! -கஜேந்திரன்

ஜனாதிபதி அனுரா குமார திஸாநாயக்க விடம் தமிழரசு கட்சி தமிழர்களுடைய 70 வருட சமஸ்டி கோரிக்கை, வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை என்பவற்றை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் தீர்வுக்கு  சம்மதம்  தெரிவித்துள்ளனர்.  எனவே இது மாவீர்களுக்கு செய்யப்படும் மிகப் பெரும் அநீதி ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் இந்த மண்ணில் நீங்கள் முற்று முழுதாக தமிழர்கள் அழிக்கப்படுவார்கள் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டக்களப்பு  கொக்கட்டிச்சோலை கலாச்சார மண்டபத்தில்  கனடா வாழ் தாயக உறவுகளின் பேராதரவுடன் மாவீர்களின் பெற்றோரை கௌரவிக்கும் நிகழ்வு வெள்ளிக்கிழமை (21)  கட்சியின் தேசிய அமைப்பாளர் தர்மலிங்கம் சுரேஸ் தலைமையில் இடம்பெற்றது இதன்போது மாவீரர்களின் பெற்றோர்கள் கௌரவித்து உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தமிழர்களின் தாயகமான வடகிழக்கில் தமிழர்கள் செய்து வந்த ஆட்சி உரிமையை 1502 ம் ஆண்டு போத்துகேயர்களிடம் இழந்தோம். அதனை தொடர்ந்து 1658 ம் ஆண்டு ஒல்லாந்தரிடம் இழந்தோம் 1796 ம் ஆண்டு ஆங்கிலேயரிடம் இழந்தோம். 1948 இந்த ஆங்கிலேயர்கள் இந்த ஆட்சி உரிமையை சிங்களவர்களிடம் கையளித்தனர்.;

இவ்வாறு 450 ஆண்டுகள் இவ்வாறு அடிமைகளாக வாழ்ந்த எங்களுடைய தேசத்தின் ஆட்சி அதிகாரங்களை 1948 ஆங்கிலேயர்களிடம் இருந்து பெற்டிகொண்ட சிங்கள பெரும்பான்மை ஆட்சியாளர்கள் இந்த முழு நாட்டையம் ஆட்சி செய்ய அதிகாரத்தை கையில் எடுத்துக் கொண்டார்கள்

அவ்வாறு எடுத்துக் கொண்டவர்கள் வடக்கு கிழக்கு தங்களுக்கு சொந்தமில்லை என்று வரலாற்று ரீதியாக தமிழர்களுடைய இராச்சியம் என தெரியும் ஆகவே தமிழர்கள் ஆளப்பட்ட வடகிழக்கை தமிழர்களிடம் இருந்து பறித்தெடுக்க வேண்டும் என்பதற்காக இந்த நாட்டை தங்கள் ஆளும் சந்தர்ப்பம் கிடைத்ததை பயன்படுத்தி பொலிஸ், இராணுவம் அதிகாரங்களை தங்களின் கைகளில் வைத்துக் கொண்டு வடகிழக்கில் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களையும் பௌத்த மயமாக்கலை செய்து எங்கள் மக்களை மண்ணில் இருந்து விரட்டியடித்து.

அந்த நிலங்கள் கபளீகரம் செய்ய முற்பட்டபோது எங்கள் மக்கள் என்ன  செய்வதறியாது சிதறி ஓடிக் கொண்டபோது அழிக்கப்பட்டுக் கொண்டிருந்த போது அந்த அழிவில் இருந்து தற்பாதுகாப்புக்காக மாத்திரம் தான் இந்த இளைஞர்கள் தங்கள் கைகளில் ஆயுதங்களை ஏந்தினார்கள்

ஒருபோதும் தமிழ் மக்கள் அப்பாவி சிங்கள மக்கள் பௌத்த மத்துக்கோ முஸ்லீம் மக்களுக்கு எதிராக ஒருபோதும் ஆயுதம்  ஏந்த வில்லை  இதை தெளிவாக எல்லோரும் விளங்கி கொள்ள வேண்டும்.

இந்த போராட்டத்தின் ஊடாக தமிழர்கள் இழந்த 70 வீதமான நிலப்பிரதேசம் உங்களுடைய பிள்ளைகள் உயர் கொடுத்து மீட்டெடுத்து 2002 ம் ஆண்டு தமிழர்களுடைய 70 வீதமான நிலப்பிரதேசம் தமிழர்களுடைய ஆளுமைக்குள் வந்ததுடன் தம்மை தாமே ஆளும் ஒரு நடைமுறை அரசு கட்டியெழுப்பப்பட்ட நிலைமைய பறைசாற்றிக் கொண்டனர்.

உங்களுடைய பிள்ளைகள் உயிர் கொடுத்து 2002ம் ஆண்டு இராணுவத்துக்கு ஏற்படுத்திய இழப்பினால் நின்று போரிட முடியாமல் மண்டியிட்டு சந்திரிக்கா அரசு சமாதான உடன்படிக்கை வந்தது அவ்வாறு அகதிகளாகி பசி பட்டினியோடு அனைத்தையும் இழந்து உங்களுடைய பிள்ளைகளின் தியாகத்தால் சமாதானம் ஏற்பட்டபோது இந்த அனுரகுமார திஸநாயக்க உடன் சேர்ந்தவர்கள் சிங்கள மக்கள் மத்தியில் கிராமம் கிராமமாக சென்று இனவெறியை ஊட்டி இளைஞர்களை இராணுவத்துக்கு சேர்த்தனர் அவ்வாறே இராணுவ முகாம் முகாமாக சென்று இராணுவத்துக்கு உசுப்பேற்றி போருக்கு தயார் படுத்தினார்கள்

2006 அந்த போர் தான் 2009 முள்ளிவாய்க்காலில் இனழிப்பாக முடிந்தது ஒன்றரை இலட்சம் பேர் இந்த முள்ளிவாய்க்காலில் அழிக்கப்பட்டார்கள் என்றால் இந்து ஜே.வி.பி யின் அனுரா, விஜித ஹேரத், சந்திரசேகரம் போன்றோர் சிங்கள கிராமம் கிராமங்களாக சென்று இனவெறி ஊட்டி திரட்டிய சிங்கள இளைஞர்கள் மேற்கொண்ட இன அழிப்பு தான் 2009 முள்ளிவாய்க்காலில் இனழிப்பாக முடிந்தது.

உங்களுடைய பிள்ளைகள் உயிர் கொடுத்து ஏற்படுத்திய அமைதி சூழலை ஜேபிவி யின் தூண்டுதலால் அழித்தனர். கடந்த 30 வருடமாக உங்கள் பிள்ளைகள் இந்த தமிழ் தேசத்தை கட்டியெழுபிய சிப்பிகள் என்பதை மனதில் வைத்துக் கொள்ள வேண்டும்.

இவ்வாறு தியாகங்களை செய்த உங்களுடைய பிள்ளைகளை அழித்துவிட்டு பயங்கரவாதிகளை அழித்துவிட்டோம் இந்த நாடு பௌத்த சிங்கள நாடு என ஒற்றையாட்சியை திணிப்பதற்கான முயற்சி நடந்து கொண்டிருக்கிறது.

உங்களுடைய பிள்ளைகள் 30 ஆண்டுகள் ஆயுதம் ஏந்தி போராடியது எதற்காக என்றால் இந்த சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை அழிக்க வேண்டும் என்பதற்காகவும் ஒற்றையாட்சி முறையை நீக்கி தமிழர்களுடைய தேசியம் சுயநிர்ணயம் என்றடிப்படையிலான தீர்வு எட்டப்பட வேண்டும் என்பதற்காகவே உங்களுடைய பிள்ளைகள் உயிர் கொடுத்திருந்தார்கள்.

முள்ளிவாய்கல் மற்றும் வாகரையில் உங்கள் பிள்ளைகளிடம் இலங்கை அரசு கேட்டது சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சியை பௌத்தம் அரச மதம் என்பதையும் ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்கு உட்பட்ட மாகாணசபையை தீர்வாக ஏற்றுக் கொள்வதாக இருந்தால் போரை நிறுத்தி உங்களை காப்பாற்றுகிறேன் என்றனர்.

ஆனால் உங்கள் பிள்ளைகள் திட்டவட்டமாக சொன்னார்கள் வடக்கு கிழக்கு இணைந்த தாயகம் அங்கீகரிக்கப்பட்டு தமிழர்களுடைய தேசியம் சுயநிர்ணயம் அங்கீகரிக்பட்டால் மாத்திரம் தான் ஏற்றுக் கொள்ள முடியும் என உறுதியாக நின்றனர் அதுதான் 2009 மிகப் பெரும் உயிர் தியாகத்துடன் அந்த போராட்டம் முடிவடைவதற்கு காரணமாக இருந்தது.

 

உங்களுடைய பிள்ளைகள் ஒற்றையாட்சியை ஏற்க மறுத்து உயிர் கொடுத்து 15 ஆண்டுகள் இன்று கடந்துள்ள நிலையில் எங்களுடைய மக்களால் தெரிவு செய்யப்பட்ட தலைவர்களின் ஆதரவுடன் இந்த அனுரகுமார அரசாங்கம் ஒற்றையாட்சி அரசியல் அமைப்பை கொண்டு வந்து நிறைவேற்ற தயாராகி கொண்டுள்ளனர் ஆகவே மக்கள் விழிப்பாக இருக்க வேண்டும் அதை ஒரு போதும் ஏற்றுக் கொள்ள கூடாது

 

19ம் திகதி ஜனாதிபதிக்கும் தமிழரசு கட்சிக்கும் இடையே சந்திப்பு இடம்பெற்றது இதில் தமிழர்களுடைய 70 வருட கால சமஷ்டி கோரிக்கையை கைவிட்டு வடகிழக்கு இணைப்பு, சுயநிர்ணய உரிமையை கைவிட்டு பௌத்தம் அரச மதம் என்பதை ஏற்றுக் கொண்டு ஒற்றையாட்சிக்குள் ஒரு தீர்வுக்கு சம்மதம் தெரிவித்து விட்டு வந்துள்ளனர்.

அது மிகப்; பெரும் அநியாயம் அது மாவீர்களுக்கு செய்யப்படும் ஒரு அநீதி இந்த ஒற்றையாட்சி நிராகரிக்கப்பட்டு தமிழர்களுடைய தேசம் அங்கீகரிக்கப்பட்டு தீர்வு எட்டப்பட்டால் நீங்கள் மாவீர்களுடைய அம்மாக்கள் அப்பாக்கள் ஆனால் ஒற்றையாட்சி திணிக்கப்பட்டு தமிழர்கள் ஏற்றக் கொள்ளப்படுவார்களாக இருந்தால் ஒற்றையாட்சியை எதிர்த்து போராடியவர்கள் சமூகவிரோதிகள் என இலங்கையின் வரலாறு எழுதும் என்பதுடன் இந்த மண்ணில் நீங்கள் முற்று முழுதாக அழிக்கப்படுவார்கள்.

அனுர சட்டத்திற்கு அனைவரும் சமம் என தெரிவித்து திருகோணமலையில்  புத்தர் சிலையை நிறுவி இருக்கிறார் எனவே அலர் பௌத்தத்திற்கு அடிமை என்பதை நிரூபித்துள்ளார் என்றார்.