அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் இயந்திரம் புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலைக்கு நன்கொடை

புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலை நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தீவகவாழ் மக்கள் பயன்பெறும் வகையில் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த 97 லட்சம் ரூபா பெறுமதியான புதிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கானர் இயந்திரம் அண்மையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

புங்குடுதீவு வ.பொ.கனகரத்தினம் அறக்கட்டளையினர் புங்குடுதீவுப் பிரதேச வைத்தியசாலை நிர்வாகத்திடம் குறித்த இயந்திரத்தைக் கையளித்தனர்.

சமீபத்திய செய்திகள்