தாயகக் கலைஞர் எஸ்.ஜி. சாந்தன் நினைவாக அண்மையில் நடந்த ‘காலக் குரல்’ மாபெரும் பாடல் போட்டியில் முதலிடம் பெற்று வெற்றிவாகை சூடிய யாழ் வடமராட்சி மண்ணைச் சேர்ந்த மாணவி தன்சிகாவுக்கான விசேட கெளரவிப்பு நிகழ்வு புதன்கிழமை (15.04.2026) வடமராட்சி உடுத்துறைப் பாரதி விளையாட்டு கழகப் பொதுமண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
கிளிநொச்சி மாவட்ட வர்த்தக சங்கத் தலைவர் இளையதம்பி விஜயசிங்கத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்டார்.நிகழ்வில் குறித்த மாணவி பணப் பரிசில்களும், பாராட்டுக்களும் வழங்கிக் கெளரவிக்கப்பட்டார்.






