நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலாத் தகவல் நிலையம், பயணிகள் இளைப்பாறும் மண்டபம் திறப்பு

வடக்கு மாகாண சுற்றுலாப் பணியகத்தின் 38 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நெடுந்தீவு இறங்குதுறையில் புதிதாக அமைக்கப்பட்ட சுற்றுலாத் தகவல் நிலையம் மற்றும் பயணிகள் இளைப்பாறும் மண்டபம் (குளியலறை, மலசலகூட வசதிகளுடன்) திறந்து வைக்கும் நிகழ்வு வியாழக்கிழமை (16.04.2026) காலை நெடுந்தீவுப் பிரதேச சபையின் தவிசாளர் ச.சத்தியவரதன் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் க.இளங்குமரன் ஆகியோர் விருந்தினர்களாகக் கலந்து கொண்டு புதிய கட்டடத் தொகுதியைத் திறந்து வைத்தனர்.