சந்நிதியான் ஆச்சிரமத்தில் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் வாராந்த நிகழ்வாக ஆன்மீகச் சிறப்புச் சொற்பொழிவு வெள்ளிக்கிழமை (17.04.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் சந்நிதியான் ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் தமிழ்நாடு கயிலை அறக்கட்டளை முனைவர் துரைசாமி கலந்து கொண்டு பன்னிரு திருமுறையும் பதினான்கு மெய்கண்ட சாத்திரங்களும் எனும் தலைப்பில் சிறப்பு ஆன்மீகச் சொற்பொழிவு ஆற்றினார். கயிலை அறக்கட்டளையின் திருமுறைச் செயற்பாடுகள், சைவசித்தாந்தச் சுடர், கல்வி நெறி பற்றியும் விளக்கினார்.