தமிழ்நாட்டில் நாளை சட்டப்பேரவை நடைபெற உள்ளநிலையில் தலைமைத் தேர்தல் அதிகாரிக்குத் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கடிதம் எழுதியுள்ளார். நியாயமான மற்றும் பாதுகாப்பான தேர்தலை உறுதி செய்ய வலியுறுத்தி இக்கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.
அக்கடிதத்தில், தேர்தல் நாளில் பிரதான சாலைகள் மற்றும் முக்கிய வழித்தடங்களில் காவல் ரோந்து பணிகளைத் தீவிரப்படுத்த வேண்டும். பெண் வாக்காளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யவும், பாதுகாப்பிற்காகவும் ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பெண் காவலர் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பறக்கும் படைகளை முழுமையாகச் செயல்படுத்தி, சிசிடிவி, ட்ரோன்கள் மற்றும் வீடியோ ஆவணப்படுத்தும் குழுக்கள் மூலம் கண்காணிப்பைப் பலப்படுத்த வேண்டும்.
முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் மற்றும் பெண்களுக்குத் தேவையான குடிநீர், இருக்கை மற்றும் நிழல் வசதிகளைப் போதுமான அளவில் வழங்க வேண்டும்.
பதற்றமான மற்றும் முக்கியமான பகுதிகளில் கூடுதல் உள்ளூர் போலீஸ் அல்லது மத்திய ஆயுதக் காவல் படைகளை ஈடுபடுத்த வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.




