தமிழ்நாடு சட்டப்பேரவைக்கான 17 வது பொது தேர்தல் வாக்குப்பதிவு இன்று (23) வியாழக்கிழமை நடைபெறுகிறது. காலை 7 மணி அளவில் ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முழுவதும் வாக்காளர்கள் ஆர்வத்துடன் வாக்களிக்க வரிசையில் நின்று கொண்டிருக்கிறார்கள்.
மொத்தம் 234 சட்டப்பேரவை தொகுதிக்கான தேர்தல் ஒரே கட்டமாக தமிழகத்தில் நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் மொத்தம் உள்ள 5.73 கோடி வாக்காளர்கள் வாக்களிப்பதற்காக 75, 064 வாக்குச்சாவடிகளை தேர்தல் ஆணையம் அமைத்திருக்கிறது. வாக்காளர்கள் தங்களுடைய தங்களுக்கு அருகாமையில் உள்ள வாக்கு சாவடிகளுக்கு சென்று எளிதாக வாக்குப்பதிவு செய்யும் வகையில் பல வசதிகளை தேர்தல் ஆணையம் ஒருங்கிணைத்து இருக்கிறது.
234 தொகுதிகளில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி- அதிமுக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி- நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம்- செந்தமிழன் சீமான் தலைமையிலான நாம் தமிழர் கட்சி- மற்றும் ஏனைய அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சைகள் என மொத்தம் 4,023 வேட்பாளர்கள் இந்த தேர்தலில் போட்டியிடுகின்றனர்.
மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக மற்றும் எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆகிய இரண்டு கட்சிகளும் நூற்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் நேரடியாக போட்டியிடுகிறது.ஆனால் இங்கு விஜயின் தமிழக வெற்றி கழகம் மற்றும் சீமானின் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுவதால் வெற்றி விகிதத்தில் மிக சிறிய அளவிலான வித்தியாசம் தான் இருக்கும் என்றும், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் பெறும் வாக்குகளால் திமுக மற்றும் அதிமுகவின் தனி பெரும்பான்மை கனவு நிறைவேறுமா? என்பது.. எதிர்வரும் மே மாதம் நான்காம் திகதியன்று தமிழகம் முழுவதும் 62 மையங்களில் நடைபெறும் வாக்கு எண்ணிக்கைக்கு பிறகு உறுதியாக தெரியவரும்.
இந்த தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் பாரிய அதிர்வை ஏற்படுத்தி இருப்பதால் வாக்குப்பதிவுக்கு முந்தைய கருத்துக் கணிப்பும், வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்து கணிப்பும் துல்லியமாக இருப்பதற்கான சாத்தியக்கூறு குறைவு என அரசியல் பார்வையாளர்கள் உறுதிபட தெரிவிக்கிறார்கள்.
காலை 7 மணிக்கு ஆரம்பித்த வாக்குப்பதிவில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின், துர்கா ஸ்டாலின், எடப்பாடி கே. பழனிச்சாமி, நடிகர் விஜய், சீமான் உள்ளிட்ட அரசியல் கட்சி பிரபலங்கள் தங்களின் ஜனநாயக கடமையை நிறைவேற்றியுள்ளனர். தொடர்ந்து அரசியல் கட்சியின் பிரபலங்களும், வேட்பாளர்களும், திரையுலக பிரபலங்களும் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து வருகிறார்கள். வாக்குப்பதிவு இன்று மாலை ஆறு மணி வரை நடைபெறுகிறது.
திரையுலக பிரபலங்களான நடிகர் அஜித், ஹரிஷ் கல்யாண், ஜெய், ஆரவ் உள்ளிட்ட பலர் தங்களுடைய வாக்குகளை பதிவு செய்து இருக்கிறார்கள்.
மேலும் தமிழகத்தின் தலைமை தேர்தல் அதிகாரியான திருமதி அர்ச்சனா பட்நாயக் தன்னுடைய வாக்கையும் செலுத்தி இருக்கிறார்.
அதிமுக கட்சியின் பொதுச் செயலாளரான எடப்பாடி கே பழனிச்சாமி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான சீமான் ஆகியோர் தங்களது வாக்குகளை பதிவு செய்துள்ளனர்.
தமிழக தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற பொது தேர்தலை பார்வையிடுவதற்காக 20 நாடுகளில் இருந்து பிரதிநிதிகளும் தமிழகம் வருகை தந்துள்ளனர் அவர்களை இந்திய தேர்தல் ஆணையம் பூங்கொத்து கொடுத்து வரவேற்று கௌரவப்படுத்தி இருக்கிறது. தற்போது அவர்கள் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் நடைபெறும் தேர்தல் நடைமுறை குறித்தும் மக்களின் பங்களிப்பும் குறித்தும் நேரடியாக கள ஆய்வு செய்கிறார்கள்.






















-
-
சிறப்புக் கட்டுரைநேட்டோ அமைப்பிலிருந்து அமெரிக்கா வெளியேறும் திட்டம்…
22 Apr, 2026 | 03:27 PM
-
சிறப்புக் கட்டுரைதிட்டமிடப்பட்ட சதி
19 Apr, 2026 | 03:55 PM
-
சிறப்புக் கட்டுரைஈரானுக்கு எதிரான அமெரிக்கப் போரும் வரலாற்று…
19 Apr, 2026 | 03:40 PM
-
சிறப்புக் கட்டுரைசமாதானத்தை வலியுறுத்திய திருத்தந்தையை கடுமையாக விமர்சித்து…
18 Apr, 2026 | 12:12 PM
-
சிறப்புக் கட்டுரையுத்தத்தில் வெற்றி பெற்றது யார்?
17 Apr, 2026 | 04:27 PM
-
சிறப்புக் கட்டுரைஇலங்கை விடயத்தில் இறுக்கமான மனநிலையிலா ரஷ்யா?
12 Apr, 2026 | 03:41 PM
-




