கருத்தரங்கு ஒன்றிற்காக வருகை தந்து, நாராஹேன்பிட்டியில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தங்கியிருந்த பெண் வைத்தியர்கள் சிலர் குளித்துக்கொண்டிருந்த போது, அவர்களைத் தமது கைத்தொலைபேசி மூலம் வீடியோ எடுத்ததாக சந்தேகத்தின் பேரில் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரும் 19 வயதுக்குட்பட்ட (U-19) தேசிய கிரிக்கெட் அணியின் உறுப்பினர்கள் என நாராஹேன்பிட்டி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் பெண்களை மட்டுமன்றி, ஆண்களின் வீடியோ காட்சிகளையும் இவ்வாறு எடுத்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.
அவ்வாறு எடுக்கப்பட்ட காட்சிகள் இணையதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளதா என்பது குறித்து மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்ட இருவரும் புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின்னர், தலா 5 இலட்சம் ரூபாய் சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், இந்த சம்பவம் குறித்து பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.




