விஜித்த ஹேரத் – இலங்கைக்கான இஸ்ரேலியத் தூதுவருக்கிடையில் சந்திப்பு

வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் மற்றும் இலங்கைக்கான இஸ்ரேல் தூதுவர் ரூவன் ஜேவியர் அசார் ஆகியோருக்கு இடையில் புதன்கிழமை (29) விசேட சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவை மேலும் விரிவுபடுத்துவது தொடர்பில் இதன்போது விரிவாக ஆராயப்பட்டுள்ளது.

இந்தச் சந்திப்பு தொடர்பில் அமைச்சர் விஜித்த ஹேரத் தனது உத்தியோகபூர்வ எக்ஸ் தளத்தில்,

இலங்கை மற்றும் இஸ்ரேல் நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளைப் பலப்படுத்துதல், பல்வேறு துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல்,  இரு நாடுகளும் பயன்பெறக்கூடிய வகையில் தொடர்ச்சியான ஈடுபாடுகளை முன்னெடுத்தல் ஆகிய விடயங்கள் தொடர்பில் அதிக கவனம் செலுத்தப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

பரஸ்பர நலன்களுக்காகவும், உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லவும் இஸ்ரேலுடன் இணைந்து செயற்பட எதிர்பார்ப்பதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.