மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுமக்களின் கருத்து கோரல் இன்று ஆரம்பம்

2026 ஆம் ஆண்டுக்காக முன்மொழியப்பட்டுள்ள விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த பொதுமக்களின்  கருத்து கோரல்  புதன்கிழமை (06) நடைபெறும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

கொழும்பு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) காலை 8.30 மணி முதல் மாலை 3.00 மணி வரை வாய்மூல கருத்துக்கள் ஏற்றுக்கொள்ளப்படும்.

2026 ஆம் ஆண்டின் இரண்டாவது மற்றும் மூன்றாவது காலாண்டுகளுக்காக ‘தேசிய அமைப்பு இயக்குனரால்’  முன்மொழியப்பட்ட விசேட கட்டணத் திருத்தம் தொடர்பாக இந்த அமர்வு நடத்தப்படுகிறது.

பொதுமக்களின் கருத்துக்களை ஆராய்ந்த பின்னர், திருத்தப்பட்ட புதிய மின்சாரக் கட்டணம் குறித்த இறுதி முடிவு மே மாதம் 9 ஆம் திகதி அறிவிக்கப்படும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு முன்னதாகத் தெரிவித்திருந்தது.

இந்தக் கலந்துரையாடலின் மூலம் பெறப்படும் பொதுமக்களின் ஆலோசனைகள் மற்றும் எதிர்ப்புகளைக் கருத்திற் கொண்டே ஆணைக்குழு தனது இறுதித் தீர்மானத்தை எடுக்கும் என இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

Geographic Reference