சுவிஸ் இதய அறுவை சிகிச்சை மருத்துவமனையில் நிகழ்ந்த உயிரிழப்புகள்

சுவிட்சர்லாந்திலுள்ள இதய அறுவை சிகிச்சை மருத்துவமனை ஒன்றில், வழக்கத்தைவிட கூடுதலாக 68 முதல் 74 நோயாளிகள் உயிரிழந்ததைக் குறித்த செய்தி ஒன்று வெளியாகியுள்ளது.

சுவிட்சர்லாந்தின் சூரிக் பல்கலை மருத்துவமனையின் இதய அறுவை சிகிச்சைப் பிரிவில், 2016ஆம் ஆண்டுக்கும் 2020ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலகட்டத்தில், கூடுதலாக 68 முதல் 74 நோயாளிகள் உயிரிழந்துள்ளனர்.

அங்கு ஏதோ தவறு உள்ளது என்பதை வெளிப்படுத்திய மருத்துவர் ஒருவர் தனது பணியை இழந்துள்ளார்.

 

அதற்குப் பிறகு மேற்கொள்ளப்பட்ட விசாரணையில், உண்மையாகவே அந்த மருத்துவமனையில் பிரச்சினை உள்ளது என்பதை தாமதமாகத்தான் கண்டறிந்துள்ளார்கள்.

அதாவது, அந்த மருத்துவமனையின் இயக்குநராக இருந்த பேராசிரியர் ஃப்ரான்செஸ்கோ ( professor Francesco Maisano) என்பவர், அந்த Cardioband கருவிகளை தயாரிக்கும் நிறுவனத்தில் பங்குகள் வைத்திருந்திருக்கிறார்.

இந்த அதிக அளவிலான உயிரிழப்புகளைத் தொடர்ந்து அவர் அந்த மருத்துவமனையிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளார்.

தற்போது சூரிக் பல்கலை மருத்துவமனையில் இயக்குநராக பணியாற்றும் மோனிகா (Monika Jänicke) என்பவர், அந்த உயிரிழப்புகள் குறித்து வெளிப்படையாக சந்தேகம் எழுப்பி பிரச்சினையை வெளிக்கொணர்ந்த மருத்துவருக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

அத்துடன், உயிரிழந்த நோயாளிகளுக்கு இழப்பீடு வழங்குவது குறித்து பரிசீலிக்கப்பட இருப்பதாகவும் மோனிகா தெரிவித்துள்ளார்.