காலி – ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட ரகினாகந்த பகுதியில் மின்சாரம் தாக்கி வயோதிபப் பெண் ஒருவர், நேற்று புதன்கிழமை (13) காலை உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் ரகினாகந்த, மீகஸ்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 74 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
குறித்த பெண் அருகிலுள்ள வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தபோது, மரமொன்று முறிந்து விழுந்ததில் அறுந்து கிடந்த மின்சாரக் கம்பியில் சிக்கி, மின்சாரம் தாக்கியதில் உயிரிழந்துள்ளதாக ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் ஊரகஸ்மங்ஹந்திய பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.





