தெல்தெனியாவில் உள்ள பம்பரகல கோவிலுக்கு அருகிலுள்ள விக்டோரியா நீர்த்தேக்கத்தில் நீராடச் சென்ற நான்கு பேரில் இருவர் நீரில் மூழ்கி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்தச் சம்பவத்தில் மேலும் ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயுள்ளார், மற்றொருவர் மீட்கப்பட்டுள்ளார்.
நீரில் மூழ்கியவர்களையும் காணாமல் போனவர்களையும் தேடும் பணியை பொலிஸாரும், உள்ளூர்வாசிகளும் மற்றும் பாதுகாப்புப் படையினர் உடனடியாகத் தொடங்கினர், இதில் இருவரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
காணாமல் போன மற்ற நபரைத் தேடும் பணி தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.



