அமெரிக்க ட்ரோனை உள்நாட்டு ஆயுதம் மூலம் வீழ்த்தியதாக ஈரான் பெருமிதம்

 ஈரானின் ராணுவ இலக்​கு​களை குறி ​வைத்து அமெரிக்கா சில நாட்​களுக்கு முன்பு தாக்​குதல் நடத்​தி​யது. இந்நிலை​யில் ஹார்​முஸ் ஜலசந்​தி​யில் உள்ள கெஷ்ம் தீவு அருகே அமெரிக்​கா​வின் எம்​.க்​யூ-9 ரீப்​பர் ரக ட்ரோனை, உள்​நாட்​டில் உருவாக்​கப்​பட்ட ஆராஷ்-இ-கமன்​கீர்’ என்ற வான்​ பாது​காப்பு ஏவுகணை மூலம் சுட்டு வீழ்த்​தி​ய​தாக ஈரான் தெரி​வித்​துள்​ளது.

அமெரிக்க ட்ரோனின் மதிப்பு 30 மில்​லியன் டாலர் என கூறப்படுகிறது. அவற்றை ரேடார்​களின் உதவி​யில்​லாமல், குறைந்த செல​வில் தயாரிக்​கப்​பட்ட வான்​ பாது​காப்பு ஏவு​கணை மூலம் சுட்டு வீழத்​தி​ய​தாக ஈரான் கூறி​யுள்​ளது. பாரசீக புராண நாயகன் ஆராஷ் பெயர் இந்த புதிய வான் பாது​காப்பு ஏவு​கணைக்கு சூட்​டப்​பட்​டுள்​ளது. இதை பெரு​மைப்​படுத்​தும் வகையில், டெஹ்​ரானில், புகழ்​பெற்ற பாரசீக வில் வீரன் ஆராஷின் உரு​வம் தாங்​கிய விளம்​பரப் பலகை பொது​மக்​கள்​ பார்​வைக்​கு வைக்​கப்​பட்​டுள்​ளது.