மஹபாகே பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தொம்பகஹவத்த பகுதியில் சட்டவிரோத மதுபானம் தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் கோடாவுடன் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை (13) மாலை மஹபாகே பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போதே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 10 பேரல்களில் நிரப்பி வைக்கப்பட்டிருந்த 1692 லீற்றர் கோடா மற்றும் சட்டவிரோத மதுபான தயாரிப்பிற்கு பயன்படுத்தப்படும் உபகரணங்கள் என்பனவும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர் ராகம பகுதியைச் சேர்ந்த 37 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
மஹபாகே பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.





