கட்டுபெத்த பகுதியில் போதைப்பொருளுடன் ஒருவர் கைது!

கல்கிஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கட்டுபெத்த பகுதியில் 11 கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கல்கிஸ்ஸ பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் திங்கட்கிழமை (22) நடத்தப்பட்ட சோதனையின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

மொரட்டுவெல்ல பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

இந்த சந்தேக நபர், தற்போது வெளிநாட்டில் தலைமறைவாக இருக்கும் முக்கிய போதைப்பொருள் கடத்தல்காரர் ஒருவருக்கு இலங்கையில் போதைப்பொருள் விநியோகம் செய்யும் விநியோகஸ்தராக செயல்பட்டு வந்துள்ளார் என்பது ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த சம்பம் தொடர்பில் மேலதிக விசாரணைகள் கல்கிஸ்ஸ பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவினரால் முன்னெடுக்கப்படுகிறது.