வடமராட்சி கிழக்குப் பிரதேச செயலகத்தின் பதில் பிரதேச செயலாளராக எவ்.சி.சத்தியசோதி நியமிக்கப்பட்டு இன்று செவ்வாய்க்கிழமை (23.06.2026) உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக் கொண்டார்.
இலங்கை நிர்வாக சேவையின் தரம்- I உத்தியோகத்தரான இவர் தற்போது சாவகச்சேரிப் பிரதேச செயலகத்தின் பிரதேச செயலாளராகவும் கடமையாற்றி வருகின்றமை இங்கு குறிப்பிடத்தக்கது.





