காலி – பொத்தல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட வாக்வெல்ல பாலத்திற்கு அருகிலுள்ள ஜின் கங்கையில் ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டமை தொடர்பில் பொத்தல பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
இந்த சடலம் செவ்வாய்க்கிழமை (23) மீட்கப்பட்டுள்ளதுடன், உயிரிழந்தவர் யார் என்பது இதுவரை அடையாளம் காணப்படவில்லை என பொத்தல பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவரின் மரணம் சந்தேகத்திற்கிடமான ஒன்றாகக் கருதப்படுவதாக முதற்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீதவான் விசாரணையைத் தொடர்ந்து, சடலம் உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக கராப்பிட்டிய வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் பொத்தல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


