நுவரவெவ பகுதியில் ஹெரோயினுடன் இளைஞனும் யுவதியும் கைது!

அநுராதபுரம் நுவரவெவ பகுதியில் ஹெரோயின் போதைப் பொருளினை வைத்திருந்த இளைஞன் ஒருவரையும் யுவதியொருவரையும் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.

பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கு அமைய  அநுராதபுரம் பொலிஸார் மேற்கொண்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட இருவரிடமிருந்து 4 கிராம் 200 மில்லிகிராம் நிறையுடைய ஹெரோயின் போதைப் பொருட்களை நுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவின் சுற்றிவளைப்பு பொலிஸ் அதிகாரிகள் குழுவினர் கைப்பற்றியுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களான இளைஞனும் யுவதியும் அநுராதபுரம் எப்பாவல பகுதியை வசிப்பிடமாக கொண்ட 20 மற்றும் 21 வயதுடைய வர்கள் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

சந்தேக நபர்களை மேலதிக விசாரணைக்கு உற்படுத்துவதற்காக அநுராதபுரம் நீதிமன்றத்தில் தடுப்புக் காவல் உத்தரவினை பெற்றுக்கொள்ளுவதற்காக   நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக  அநுராதபுரம் வலய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.