அஸ்வெசும நலன்புரித் திட்டத்தின் கீழ், இனிவரும் காலங்களில் ஏழை குடும்பங்களுக்கு மாத்திரமே கொடுப்பனவுகள் வழங்கப்படும் என நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.
அஸ்வெசும நலன்புரித் திட்டம் கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டதுடன், அதன் இரண்டாம் கட்டம் இந்த ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. இதற்கான தரவுகளைப் புதுப்பிக்கும் பணிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கடந்த 2023ஆம் ஆண்டில், 4 பிரிவுகளின் கீழ் சுமார் 16 இலட்சம் பேருக்கு அஸ்வெசும கொடுப்பனவுகள் வழங்கப்பட்டன. எனினும், கடந்த 2025 ஏப்ரல் மாதத்தில், அதன் நான்காவது பிரிவை சேர்ந்த 315,000 பயனாளிகளுக்கான கொடுப்பனவுகள் நிறுத்தப்பட்டுள்ளன.
அதேபோல், இதன் மூன்றாவது பிரிவை சேர்ந்த 425,000 பயனாளிகளுக்கான அஸ்வெசும கொடுப்பனவுகளும் இந்த ஆண்டு ஜூன் மாதம் முதல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும், இந்த இரண்டு பிரிவுகளிலும் உள்ள குடும்பங்களில் ஏதேனும் குடும்பங்கள் ஏழை நிலைக்குத் தள்ளப்பட்டிருந்தால், அவர்கள் மீண்டும் அஸ்வெசும நன்மைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என நலன்புரி நன்மைகள் சபையின் உதவி ஆணையாளர் அசான் தர்ஷக தெரிவித்துள்ளார்.





