அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளர் இந்திக ஜயலத் இராஜினாமா!

அகலவத்தை பிரதேச சபையின் உப தவிசாளராக  கடமையாற்றிய இந்திக ஜயலத் தனது பதவியை இராஜினாமா செய்ய தீர்மானித்துள்ளார்.

தனது இராஜினாமாவுக்கான காரணங்களை உள்ளடக்கிய கடிதத்தை அவர் பிரதேச சபையின் தவிசாளரிடம் உத்தியோகபூர்வமாக கையளித்துள்ளார்.

அகலவத்தை பிரதேசத்தின் அபிவிருத்திப் பணிகள் முடங்கியுள்ளதை சுட்டிக்காட்டி அவர் தனது கடிதத்தில் திட்டமிடப்பட்ட அகலவத்தை நகர அபிவிருத்தித் திட்டம் நடைமுறைப்படுத்தப்படாமை, அகலவத்தை பிரதேசத்திற்கான புதிய நீதிமன்ற வளாகத்தைப் பெற்றுக்கொள்ள முடியாமை, முன்மொழியப்பட்ட புதிய பொலிஸ் நிலையத்திற்காக உரிய இடத்தை ஒதுக்கீடு செய்யாமை, யகியன  பகுதியில் திட்டமிடப்பட்ட வர்த்தக மையத்தை நிறுவத் தவறியமை மற்றும் அனர்த்த முகாமைத்துவக் கட்டிடத்தை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்காமை போன்ற பல முக்கிய காரணங்களைக் குறிப்பிட்டுள்ளார்.

இந்தக் காரணங்களினால் அதிருப்தியடைந்துள்ள அவர், உப தவிசாளர் பதவிக்கு மேலதிகமாக பிரதேச சபையின் நிதி மற்றும் கொள்கைக் குழு  மற்றும் தொழில்நுட்ப சேவைகள் குழு ஆகியவற்றில் இருந்தும் விலகுவதாக அக்கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளார்.