கழகத்தின் செய்தித் தொடர்பாளராக முகமது அலி தொடர்ந்து செயல்படுவார் ! – வைகோ

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் செய்தித் தொடர்பாளராக இருந்த மின்னல் முகமது அலி அவர்களின் மகன் கஞ்சா எனும் போதைப் பொருளை பயன்படுத்துவதை அவர் அறியவில்லை. அவன் கைதான பின்புதான், அவர் உண்மையைத் தெரிந்துகொண்டார். மகனை கடுமையாகக் கண்டித்தார்.

இனி இந்தக் கொடிய பழக்கதிற்கு ஆளாக மாட்டேன் என்று அவரது மகன் உறுதி அளித்து, தற்போது கேரள மாநிலத்தில் மருத்துவ சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மின்னல் முகமது அலி எந்தத் தவறும் செய்யவில்லை. 30 ஆண்டுகளாக கழகத்திற்கு உண்மை விசுவாசியாக, எந்த பிழையும் செய்யாதவராக, தனக்கென்று எதையும் எதிர்பாராதவராக கழகத்திற்கு உண்மையாக உழைக்கின்ற மின்னல் முகமது அலி தொடர்ந்து கழகத்தின் செய்தித் தொடர்பாளராக செயல்படுவார்.