கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஊடாக 6 கிலோ 180 கிராம் ‘குஷ்’ போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் விமான நிலையப் பிரிவு அதிகாரிகள் இன்று (14) செவ்வாய்க்கிழமை அதிகாலை நடத்திய அதிரடி சோதனையின் போது இந்த கடத்தல் முறியடிக்கப்பட்டது.
நாட்டுக்குள் கடத்த முயன்ற 6 கிலோகிராம் மற்றும் 180 கிராம் எடையுடைய ‘குஷ்’ போதைப்பொருள் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டுள்ளது.
கைது செய்யப்பட்டவர் 63 வயதுடைய பிலிப்பைன்ஸ் நாட்டுப் பெண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் தற்போது போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் காவலில் வைக்கப்பட்டு மேலதிக விசாரணைகளுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.




