வரலாற்று பழமை வாய்ந்த சோழர்காலப் பூநகரி மண்ணித்தலைச் சிவன் ஆலயம் மீள் புனர்நிர்மாணம் செய்யப்பட்டு மக்களிடம் கையளிக்கும் நிகழ்வு நாளை வியாழக்கிழமை (16.07.2026) மாலை-03 மணியளவில் இடம்பெறும்.
இதனை முன்னிட்டுத் தொல்லியல் திணைக்களத்தின் யாழ்ப்பாணப் பிராந்திய அலுவலகம், வடக்கு மாகாணச் சுற்றுலாப் பணியகம் மற்றும் இராஜ இராஜேந்திர சுவாமிகள் இணைந்து புராதன சிவத் தலங்களைத் தரிசிக்கும் மரபுரிமைப் பயணம் நாளை காலை-07.30 மணியளவில் யாழ்ப்பாணம் கோட்டை முன்றலில் ஆரம்பமாகவுள்ளது.






