வவுனியாப் புளியங்குளம் புதூர்ச் சந்திப் பகுதியில் சனிக்கிழமை (25.07.2026) மாலை நடந்த மோட்டார்ச் சைக்கிள் விபத்தில் இளைஞர் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் அவரது சகோதரி படுகாயமடைந்த நிலையில் வவுனியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
யாழிலிருந்து வவுனியா நோக்கித் தனது சகோதரியுடன் மோட்டார்ச் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இளைஞர் ஏ-9 வீதி புளியங்குளம் புதூர்ச் சந்திப் பகுதியில் சென்று கொண்டிருந்த போது பிறிதொரு வாகனத்தை முந்திச் செல்ல முற்பட்ட போது குறித்த மோட்டார்ச் சைக்கிள் வேகக் கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவத்தில் வவுனியா புதுக்குளம் பகுதியைச் சேர்ந்த சத்தியநாதன் சஞ்சீவன் (வயது- 23) என்ற இளைஞனே உயிரிழந்துள்ளார். விபத்து தொடர்பில் புளியங்குளம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.






