அஹுங்கல்ல பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கடற்கரையில் நீராடிக்கொண்டிருந்த வெளிநாட்டுத் தம்பதி அலையில் இழுத்துச் செல்லப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் நேற்று சனிக்கிழமை (25) இடம்பெற்றுள்ளது.
சம்பவ இடத்தில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் உயிர்காப்புப் பிரிவினரால் அலையில் இழுத்துச் செல்லப்பட்ட தம்பதி இருவரும் காப்பாற்றப்பட்டனர்.
மீட்கப்பட்டவரக்ள் 59, 46 வயதுடைய ரஷ்ய பிரஜைகள் ஆவர்.



