தலைமன்னார், பேசாலை பகுதியில் சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட சங்குகளுடன் சந்தேக நபரொருவர் திங்கட்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.
கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போதே சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தலைமன்னார், பேசாலை பிரதேசத்தில் வசிக்கும் 42 வயதுடையவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து சட்டவிரோதமாக பிடிக்கப்பட்ட 3,492 சங்குகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மேலதிக விசாரணைகளுக்காக மன்னார் மீன்வள ஆய்வாளர் அலுவலகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.





