நெல்லை விற்பனை செய்யுமாறு அரசாங்கம் விவசாயிகளை வற்புறுத்தாது

அரசாங்கத்திற்கு நெல்லை விற்பனை செய்யுமாறு அரசாங்கம் விவசாயிகளை வற்புறுத்தாது எனக் கூறி, குறைந்தபட்ச உத்தரவாத விலையில் ஒரு தொகை நெல்லை அரசாங்கத்திற்கு வழங்குமாறு விவசாய மற்றும் கால்நடை பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன விவசாயிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து ஊடகவியலாளர்களிடம் அவர் கூறிய போது: இன்னும் சில நாட்களில் குறைந்தபட்ச உத்தரவாத விலை அறிவிக்கப்பட்டு நெல் கொள்முதல் செய்யும் பணியை அரசு விரைவில் தொடங்கும்.

“நெல் சேமிப்பு கிடங்குகள் தற்போது நெல்லை கொள்முதல் செய்ய தயாராக உள்ளன. விவசாயிகளை அரசிடம் நெல்லை விற்பனை செய்ய வற்புறுத்த மாட்டோம்.

விவசாயிகளுக்கு குறைந்த பட்ச உத்தரவாத விலையில் ஓரளவு நெல்லை அரசிடம் வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இது விவசாயிகளின் கடமை. நாங்கள் அரசு கொள்முதல் செய்யும் நெல்லை குறைந்த விலைக்கு விற்காமல், கட்டுப்பாட்டு விலையை விட குறைந்த விலையில் மக்களுக்கு அரிசி வழங்க பயன்படுத்துவோம்,” என்றார்.