வடமராட்சி கிழக்கில் தவறான முடிவெடுத்து 70 வயது முதியவர் உயிரிழப்பு!

யாழ்.வடமராட்கி கிழக்கு செம்பியன்பற்றுத் தெற்குப் பகுதியில்   ஞாயிற்றுக்கிழமை (02.02.2025) அதிகாலை 70 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவரின் சடலம் உடலில் கயிறு கட்டிய நிலையில் குளத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த குறித்த முதியவர் வேதனை தாங்க முடியாமல் தனது உயிரை மாய்த்துக் கொண்டதாகத் தெரியவருகின்றது.  மருதங்கேணிப் பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.