77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு மதுபானசாலைகளுக்கு பூட்டு

இலங்கையின் 77 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதயில் உள்ள அனைத்து மதுபானசாலைகளும் நாளை செவ்வாய்க்கிழமை (04)  மூடப்படவுள்ளதாக மதுவரி திணைக்களம் அறிவித்துள்ளது.

நாளைய தினம் மதுபான விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் உதய குமார பெரேரா தெரிவித்துள்ளார்.