டொயோட்டா லேண்ட் குரூசர் ரக வாகனமொன்றை சட்டவிரோதமான முறையில் நாட்டிற்குள் இறக்குமதி செய்து அதனை இலங்கை மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தில் முறையற்ற வகையில் பதிவு செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட வர்த்தகர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
உரிய அனுமதியின்றி நாட்டிற்குள் இறக்குமதி செய்து மோட்டார் வாகன பதிவுத்திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள வாகனங்கள் தொடர்பில் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முன்வைக்கப்பட்டுள்ள முறைப்பாடுகள் தொடர்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் விசாரணைக்கு அமைய சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்கமைய மொரந்துடுவ பிரதேசத்தில் வசிக்கும் வர்த்தகர் ஒருவரே விசாரணை அதிகாரிகளால் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் நேற்று (04) பாணந்துறை நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து அவரை எதிர்வரும் 07 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அத்துடன் அவரை கொழும்பு பிரதான நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்துமாறும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கு நீதவான் உத்தரவிட்டார்.





