மாத்தறை, மிதிகம பிரதேசத்தில் கொக்கெய்ன் போதைப்பொருளுடன் சந்தேக நபரொருவர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரால் நேற்று வெள்ளிக்கிழமை (07) இரவு கைது செய்யப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையினருக்குக் கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிதிகம பிரதேசத்தில் வசிக்கும் 32 வயதுயைடவர் ஆவார்.
சந்தேக நபரிடமிருந்து 20 கிராம் கொக்கெய்ன் போதைப்பொருள், 02 கையடக்கத் தொலைபேசிகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் சம்பாதித்தாக கூறப்படும் 75 ஆயிரம் ரூபா பணம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இதனையடுத்து, கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மிதிகம பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மிதிகம பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.