யாழ். கோண்டாவில் கிழக்கு ஸ்ரீ மகாகாளி அம்பாள் ஆலய வருடாந்த மஹோற்சவத்தின் திருமஞ்சத் திருவிழா நேற்றுச் சனிக்கிழமை (20.04.2024) இரவு பக்திபூர்வமாக இடம்பெற்றது.
இதன்போது மின்குமிழ்களால் அலங்கரிக்கப்பட்ட புதிய திருமஞ்சத்தில் அம்பாள் பவனி வந்தாள். திருமஞ்ச வீதி உலாவில் நூற்றுக்கும் மேற்பட்ட அடியவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.






