மின்சாரக் கட்டணத் திருத்தம் : பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு இன்று அறிவிப்பு

026ஆம் ஆண்டுக்கான, முன்மொழியப்பட்ட விசேட மின்சாரக் கட்டணத் திருத்தம் குறித்த தீர்மானம் சனிக்கிழமை (9) அறிவிக்கப்படவுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டின் இரண்டாம் காலாண்டிற்கான மின்சார உற்பத்திக்கான திருத்தப்பட்ட செலவு மதிப்பீட்டை ‘நெஷனல் சிஸ்டம் ஒப்பரேட்டர்’ (National System Operator (Pvt) Ltd) நிறுவனம் அண்மையில் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்திருந்தது.

எரிபொருள் விலையேற்றம் காரணமாக மின்சார உற்பத்திச் செலவு அதிகரித்துள்ளதால், இந்தக் கட்டண உயர்வு கோரப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

முன்மொழியப்பட்ட திருத்தம் தொடர்பாக வாய்மொழி மூலமான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் சமர்ப்பிப்பதற்கான கால அவகாசம் அண்மையில் நிறைவடைந்தது.

இலங்கை செய்திகள்

தரம் குறைந்த நிலக்கரி பயன்பாட்டினால் ஏற்படும் நட்டங்கள் மின்சாரக் கட்டணத்தில் சேர்க்கப்பட மாட்டாது என ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

முன்னதாக, 2026 ஏப்ரல் 1ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டாம் காலாண்டுக்கான மின்சாரக் கட்டணத் திருத்தத்திற்கு ஆணைக்குழு அனுமதி அளித்திருந்தது. அதன்படி கட்டணங்கள் 8 சதவீதம் முதல் 14.4 சதவீதம் வரை அதிகரிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.