கொக்குவிலில் மாணவர்களுக்கு டெங்கு விழிப்புணர்வுக் கருத்தரங்கு

சர்வதேச லயன்ஸ் கழகம் மாவட்டம் 306 பி1 இன் மாவட்ட ஆளுநர் லயன் பிளஸிடஸ் எம்.பீற்றரால் டிசம்பர் மாதம்-04 ஆம் திகதி முதல் 10 ஆம் திகதி வரையான காலப் பகுதி டெங்கு விழிப்புணர்வு வாரமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் யாழ்ப்பாணம் சிற்றி லயன்ஸ் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று வியாழக்கிழமை (07.12.2023) யாழ்.கொக்குவில் கிழக்கு நாமகள் வித்தியாலய மாணவர்களுக்கு டெங்கு நோயிலிருந்து எம்மை எவ்வாறு பாதுகாப்பது? என்பது தொடர்பான விழிப்புணர்வுக் கருத்தரங்கு நடைபெற்றது.