ஹாலி-எல பகுதியில் மின்சாரம் தாக்கி விவசாயி உயிரிழப்பு!

ஹாலி-எல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உடுவர பகுதியில் நபர் ஒருவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளதாகக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

இச்சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை (17) நண்பகல் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

உயிரிழந்தவர் உடுவர, ஹாலி-எல பகுதியைச் சேர்ந்த 60 வயதுடைய ஒருவராவார்.

முதற்கட்ட விசாரணைகளின்படி, உயிரிழந்த நபர் தனது வயல் நிலத்திற்கு சட்டவிரோதமான முறையில் கட்டப்பட்டிருந்த மின்சாரக் கம்பியில் சிக்கியதாலேயே இந்த விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.

மேலும், இச்சம்பவம் குறித்து ஹாலி-எல பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டு  வருகின்றனர்.