உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவராக ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் தேர்வு!

உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவராக ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உடுநுவர பிரதேச சபையின் பிரதித் தலைவர் ராஜினாமா செய்ததை அடுத்து  ஏற்பட்ட வெற்றிடத்திற்கு  ரஃபாய்தீன் முகம்மது சிராஜ் (ஐக்கிய ஜனநாயக தேசியக் கூட்டணி) ஏகமனதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்துவின் மேற்பார்வையில், உடுநுவர பிரதேச சபையில் இது இடம் பெற்றது.