கண்டியில் வியாபார நிலையத்தில் தீ விபத்து

கண்டி, மெனிக்ஹின்ன பகுதியில் இன்று (22) புதன்கிழமை 03 மாடி வியாபார நிலையமொன்றில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த தீ விபத்தில் குறித்த கட்டிடம் பாரியளவில் சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

தீ பரவலை கட்டுப்படுத்த தீயணைப்பு படையினர் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டதுடன், பின்னர் தீ முழுமையாக கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது.

சம்பவத்திற்கான காரணம் இதுவரை தெரியவராத நிலையில், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.