சந்நிதியான் ஆச்சிரமத்தில் மகாபாரத தொடர்ச் சொற்பொழிவு

சந்நிதியான் ஆச்சிரம சைவகலை பண்பாட்டுப் பேரவையின் ஏற்பாட்டில் ஆச்சிரமத்தின் வாராந்த நிகழ்வாக மகாபாரத தொடர்ச் சொற்பொழிவும் உதவிகள் கையளிப்பும் வெள்ளிக்கிழமை (24.07.2026) முற்பகல்-10.30 மணியளவில் சந்நிதியான் ஆச்சிரம மண்டபத்தில் நடைபெற்றது.
ஆச்சிரம முதல்வர் செ.மோகனதாஸ் சுவாமிகள் தலைமையில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் ஆசிரியரும், சைவப் புலவருமான இரா.செல்வவடிவேல் கலந்து கொண்டு மகாபாரதம் எனும் தலைப்பில் தொடர்ச் சொற்பொழிவு நிகழ்த்தினார்.